இந்தியா
டிஜிட்டல் தரவு பாதுகாப்பு சட்டம் 2025-க்கான வரைவு விதிகள் வெளியீடு: பொதுமக்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
- ஆட்சேபனை மற்றும் கருத்துகளை தெரிவிக்க இணையதளம் அறிவிப்பு.
- பிப்ரவரி 18-ந்தேதிக்குப் பிறகு வரைவு விதிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் தரபு பாதுகாப்பு சட்டம் 2025 வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தங்களுடைய ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தங்களுடைய கருத்துகளை mygov.in இணைய தளத்தில் தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
பிப்ரவரி 18-ந்தேதிக்குப் பிறகு வரைவு விதிகள் பரிலீசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.