இந்தியா
திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
- பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் நேரடியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
- ஒரு மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் கூட்டம் குறைந்தது. நேற்று இரவு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததையொட்டி புத்தாண்டை வரவேற்கும் விதமாக பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்.
பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் நேரடியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 62,495 பேர் தரிசனம் செய்தனர். 19,298 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.