3 அடி உயரத்திற்கு தாடி வளர்த்த நபர்
- நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன்.
- பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 3 அடி நீளம் கொண்ட தாடியை வளர்த்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்து கொள்கிறேன். கடந்த 7 வருடங்களாக ஷேவ் செய்யாமல் தாடியை வளர்த்து வருகிறேன். நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன். குளிக்கும் போது கண்டிஷனரையும் தடவுவேன். இந்த பொருட்களை தவிர தாடியை நல்ல நிலையில் வைத்திருக்க தேங்காய் மற்றும் எள் எண்ணையையும் தடவுவேன்.
பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன். இந்த போட்டிகள் நீண்ட தாடியை பராமரிக்கும் எனது ஆர்வத்திற்கு ஊக்கத்தை அளித்தது. நான் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல பஸ் மூலம் தினமும் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். எனது பணி இடத்திற்கு செல்லும் போது தாடியை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்து கொள்கிறேன் என்றார்.