இந்தியா
சனாதன தர்மம் தான் இந்தியாவின் தேசிய மதம் - யோகி ஆதித்யநாத்
- மகா கும்பமேளாவில் சாதி, மத ரீதியிலான எந்த பாகுபாடும் இல்லை.
- சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள், இதை நேரடியாக வந்து பாருங்கள்.
சனாதன் தர்மம் தான் இந்தியாவின் தேசிய மதம் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் , பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் சாதி, மதம் பார்க்காமல் கிட்டத்தட்ட ஆறு கோடி பக்தர்கள் புனித நீராடினார்கள். இங்கு எந்த பாகுபாடும் இல்லை. சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள், இதை நேரடியாக வந்து பாருங்கள்.
சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். இது மனிதநேயத்தின் மதம். இங்கு வழிபாட்டு முறைகள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் மதம் ஒன்று தான். அந்த மதம் தான் சனாதன தர்மம்" என்று தெரிவித்தார்.
மகாகும்பத்தின் முதல் 14 நாட்களில் 11 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜின் புனித நீரில் புனித நீராடியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.