அவன் கிடக்கான்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் 10 வயசு சாமியாரை விமர்சித்த சுவாமி ராமபத்ராச்சார்யா
- அபினவ் அரோராவை ஆன்மீக தலைவரான சுவாமி ராமபத்ராச்சார்யா விமர்சித்துள்ளார்.
- சுவாமி ராமபத்ராச்சார்யா முன்பு அபினவ் அரோரா நடனமாடியது ட்ரெண்டானது.
அபினவ் அரோரா என்ற 10 வயதான சிறுவன் தன்னை தானே ஆன்மீக போதகர் என்று அறிவித்து கொண்டு ஆன்மீக போதனைகளை வழங்கி வருகிறார். இந்த சிறுவனை இன்ஸ்டாகிராமில் 9.58 லட்சம் பேரும் பேஸ்புக்கில் 2.2 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். சிறுவனது யூடியூப் சேனலை 1.3 லட்சம் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.
கிருஷ்ணர் மற்றும் ராதை பற்றிய சொற்பொழிவுகளால் அபினவ் அரோரா இணையத்தில் வைரல் ஆனார்.
'பால் சந்த் பாபா' என்று அழைக்கப்படும் அபினவ் அரோராவை இந்து மத ஆன்மீக தலைவரான சுவாமி ராமபத்ராச்சார்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.
துறவிகள் போன்று ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றும் குழந்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சுவாமி ராமபத்ராச்சார்யாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், இது துரதிர்ஷ்டவசமானது. அபினவ் அரோரா ஒரு 'முட்டாள்' பையன். பகவான் கிருஷ்ணர் தன்னுடன் படிக்கிறார் என்று அந்த சிறுவன் கூறுகிறார். பிருந்தாவனத்திலும் நான் அவரை திட்டியிருந்தேன்" என்று தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியின் போது, சுவாமி ராமபத்ராச்சார்யா முன்பு அபினவ் அரோரா நடனமாடியது ட்ரெண்டானது. அப்போது கடுப்பான சுவாமி ராமபத்ராச்சார்யா அந்த சிறுவனை கீழே இறங்க சொன்னார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.