சினிமா செய்திகள்

ரன்வீர் சிங்

null

சொகுசு குடியிருப்பு வாங்கிய ரன்வீர் சிங்.. முத்திரை கட்டணம் மட்டும் இத்தனை கோடியா?

Published On 2022-07-11 10:26 IST   |   Update On 2022-07-11 10:26:00 IST
  • மும்பை திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங்.
  • இவர் தற்போது ரூ.119 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கியுள்ளார்.

இந்தி திரையுலகில் 2010-ம் ஆண்டு அறிமுகமான ரன்வீர் சிங், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இதன்மூலம் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். தற்போது நடிகர் ரன்வீர் சிங் மும்பையில் ரூ.119 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளார்.

ரன்வீர் சிங்

இந்த குடியிருப்பு மும்பை பாந்திரா பகுதியில் பேண்ட்ஸ்டான்டில் உள்ளது. அங்கு கடலை நோக்கி அமைந்திருக்கும் சாகரஷேம் என்ற சூப்பர் பிரிமீயம் குடியிருப்பின் 16, 17, 18 மற்றும் 19-வது தளங்களில் உள்ள குடியிருப்புகளை நடிகர் ரன்வீர் சிங் மொத்தமாக வாங்கி உள்ளார்.

ரன்வீர் சிங்

இது 11 ஆயிரத்து 266 சதுர அடி கார்பெட் ஏரியாவும், 1300 அடி பிரத்தியேக மொட்டை மாடியுடனும் உள்ளது. அதோடு 19 கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியாவையும் வாங்கி உள்ளார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பை பதிவு செய்வதற்காக நடிகர் ரன்வீர் சிங் முத்திரை கட்டணமாக மட்டும் ரூ.7.13 கோடி செலுத்தி உள்ளார். மும்பையில் சமீபத்தில் பத்திர பதிவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News