ஆந்திராவில் நடைபயணம்- மந்த்ராலயம் ராகவேந்திரர் கோவிலில் ராகுல் காந்தி தரிசனம்
- மந்த்ராலயம் மடத்துக்குச் சென்ற ராகுல், ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியை வழிபட்டார்.
- ராகுல் காந்தி மந்த்ராலயத்தின் புறநகரில் உள்ள ஹெலிபேட் மைதானம் அருகே நேற்று நடைபயணத்தை நிறைவு செய்தார்.
திருப்பதி:
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடைபயணம் 4-வது நாளாக ஆந்திராவில் இன்று நடந்தது.
நேற்று யாத்திரையில், விசாக உக்கு பரிரக்ஷனா போராட்ட கமிட்டி, பிரத்யேக ஹோதா விபஜன ஹமீலா சாதனா சமிதி, அமராவதி பரிரக்ஷனா சமிதி, ஆந்திரப் பிரதேச பஞ்சாயத்து ராஜ் சேம்பர், ஆந்திர வேலையற்ற இளைஞர் சங்கம், மதிகா தண்டோரா மற்றும் பல மக்கள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ராகுல் காந்தியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிரச்சனைகளுக்கு ராகுல் சாதகமாக பதிலளித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்தார்.
யெம்மிகனூரில் உள்ள மச்சானி சோமப்பா வட்டம் மற்றும் கல்வகுண்ட்லா கிராமத்தில் தெருமுனை கூட்டங்களில் பேசினார்.
பின்னர், மந்த்ராலயம் மடத்துக்குச் சென்ற ராகுல், ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியை வழிபட்டார். அவர் மந்த்ராலயத்தின் புறநகரில் உள்ள ஹெலிபேட் மைதானம் அருகே நேற்று நடைபயணத்தை நிறைவு செய்தார். இன்று 44-வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுல் காந்தியின் யாத்திரை நடைபயணம் ஆந்திராவில் மக்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.