இந்தியா

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Published On 2025-02-19 07:58 IST   |   Update On 2025-02-19 07:58:00 IST
  • டெல்லியின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
  • பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களை கடந்துவிட்டது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

எனினும், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லாத சூழல் தான் நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

அந்த வையில், இன்று மாலைக்குள் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20) மாலை டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக மைதானத்தில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டெல்லி புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவின் போது சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய ராம்லீலா மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று தெரிகிறது.

நாளை (பிப்ரவரி 20) மாலை 4:30 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்வில் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News