குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
- புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.
- இவர் 2029-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து சந்தித்தார்.
இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை குடியரசு தலைவர் அலுவலகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவில், இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஞானேஷ் குமார் நேற்று (புதன் கிழமை) இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த ராஜீவ் குமார் ஓய்வு பெற்ற நிலையில், ஞானேஷ் குமார் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ளார். இவர் வருகிற 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.