இந்தியா
3 மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை
- ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது.
- பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க இறைச்சி, முட்டை டீலர்களுக்கு கர்நாடக அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.