ஜே.பி.சி.-யால் அங்கீகரிக்கப்பட்டது வக்பு வாரிய திருத்த மசோதா: 14 மாற்றங்களுக்கு ஒப்புதல்
- 44 திருத்தங்கங்களுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
- எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பாராமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த குழு ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பிடித்திருந்துள்ளனர்.
இந்த குழு மத தலைவர்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை கேட்டது. குழுவில் உள்ள எம்.பி.க்களும் பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தினர்.
இந்த நிலையில் 44 மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், இதில் 14 மாற்றங்களுக்கு இந்த குழு ஒப்பந்தல் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
14 மாற்றங்களை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு ஜனவரி 29-ந்தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 31-ந்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நவம்வர் 29-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், பிப்ரவரி 13-ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. அன்றைய தினம் பட்ஜெட் தொடரின் கடைசி நாளாகும்.
"44 மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆறு மாதங்களாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் திருத்தங்களை பெறப்பட்டது. இது எங்களுடைய கடைசி ஆலோசனைக் கூட்டம்.
மெஜாரிட்டி வாக்கு என்ற அடிப்படையில் 14 பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாற்றங்களை முன்வைத்தனர். அவைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. அவர்களுடைய திருத்தங்களுக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிர்த்து 16 வாக்குகளும் பதிவாகின" என ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.
இந்த கமிட்டியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலைவர் மீது குற்றம்சாட்டினர். டெல்லி தேர்தல் கண்ணோட்டத்தோடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்கிறார் என மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர்.
கூட்டத்தின்போது ரகளையில் ஈடுபட்டதாக 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய நேரம் தரப்படவில்லை எனவும் புகார் அளித்தனர்.
வக்பு வாரிய திருத்த மசோதாவில், வக்பு வாரிய நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் குறித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம் அல்லாத நபர்கள், குறைந்த பட்சம் இரண்டு பெண்கள் குழுவில் இடம் பெற வழிவகை செய்கிறது.
ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய அமைச்சர், மூன்று எம்.பி.க்கள், இரண்டு முன்னாள் நீதிபதிகள், நாடு தழுவிய அளவில் புகழ்பெற்ற நான்கு பேர்கள், மூத்த அரசியல் அதிகாரிகள் இடம் பெறும் வகையில் சட்ட திருத்த மசோதா உள்ளது. கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வக்பு வாரியம் நிலத்திற்கு உரிமை கோர இயலாது.