இந்தியா

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்- ஆ.ராசா எம்.பி.

Published On 2025-01-27 15:47 IST   |   Update On 2025-01-27 15:47:00 IST
  • மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் இருக்கிறார்.
  • இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் செயல்படுகிறார்.

வக்பு வாரிய திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பாராமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த குழு ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பிடித்திருந்துள்ளனர்.

இந்த குழு மத தலைவர்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை கேட்டது. குழுவில் உள்ள எம்.பி.க்களும் பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தினர்.

இந்த நிலையில் 44 மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், இதில் 14 மாற்றங்களுக்கு இந்த குழு ஒப்பந்தல் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

14 மாற்றங்களை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு ஜனவரி 29-ந்தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 31-ந்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மெஜாரிட்டி வாக்கு என்ற அடிப்படையில் 14 பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாற்றங்களை முன்வைத்தனர். அவைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. அவர்களுடைய திருத்தங்களுக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிர்த்து 16 வாக்குகளும் பதிவாகின" என ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.

இந்த கமிட்டியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலைவர் மீது குற்றம்சாட்டினர். டெல்லி தேர்தல் கண்ணோட்டத்தோடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்கிறார் என மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர்.

கூட்டத்தின்போது ரகளையில் ஈடுபட்டதாக 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய நேரம் தரப்படவில்லை எனவும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், வக்பு வாரிய மசோதாவிற்கு பாராமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்ததை கண்டித்து டெல்லியில் எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் இருக்கிறார். இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு.

இஸ்லாமியர்களின் 60% சொத்துக்களை பறிக்கவே, வக்பு சட்டத்திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற துடிக்கிறது பாஜக அரசு. அதற்கு உடந்தையாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறது. வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News