இந்தியா

காதலர் தின சப்பாத்தி சுட்ட மனைவி- வைரலாகும் வீடியோ

Published On 2025-02-13 09:26 IST   |   Update On 2025-02-13 09:26:00 IST
  • வீடியோ எடுத்து காதலர் தின சப்பாத்தி என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டார்.
  • வீடியோ இதுவரை சுமார் 70 லட்சம் பேரின் பார்வையை பெற்று வைரலாகியது.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசு வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்துவர். இந்த பரிசுகள் அவர்களது உறவை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமையும். இந்த பரிசுகளில் காதலின் சின்னமாக கருதப்படும் இதயத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

ஒரு பெண் தனது கணவருக்கு சப்பாத்தி சுட்டு கொடுத்தார். அதனை எப்போதும் போல செய்யாமல் சற்று வித்தியாசமாக தனது காதலர் தின பரிசாக வழங்கி உள்ளார். ஆனால் அந்த சப்பாத்தியின் நடுவே இதயம் போல சிறுதுண்டுகள் இருந்தன. மேலும் அதனை வீடியோ எடுத்து காதலர் தின சப்பாத்தி என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டார்.

இந்த வீடியோ இதுவரை சுமார் 70 லட்சம் பேரின் பார்வையை பெற்று வைரலாகியது.



Tags:    

Similar News