இந்தியா
கார் ஓட்டும் போது லேப்டாப்பில் வேலை.. பெண்ணிற்கு அபராதம் விதித்த போலீஸ்
- கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.
- போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப் பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், ஆனால் கார் ஓட்டும் போது வேலை செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.