இந்தியா
null

440 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரத்து: இலங்கையிலிருந்து வெளியேறும் அதானி குழுமம்

Published On 2025-02-13 16:04 IST   |   Update On 2025-02-13 16:05:00 IST
  • அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்தது.
  • மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 440 மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டது. ஆனால் சந்தை விலையைவிட 70 சதவீதம் அதிக விலைக்கு வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்வதாக, அனுர குமார திசா நாயக தலைமையிலான இலங்கை அரசு கடந்த மாதம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "இலங்கையின் RE காற்றாலை மின்சார திட்டம் மற்றும் இரண்டு மின் பரிமாற்ற திட்டங்கள் ஆகிவற்றில் இருந்து விலகுகிறோம் என்ற முடிவை உயர்மட்ட குழுவால் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசு விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்பிற்காக தயாராக இருக்கிறோம் என்பதில் தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்திற்கு மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News