
வாக்கு வங்கி அபாயத்தால் தமிழகத்தில் மொழி அரசியல் செய்கிறார்கள் - யோகி ஆதித்யநாத்
- காசி தமிழ் சங்கமத்தை வாரணாசியில் ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.
- சமஸ்கிருதத்தைப் போலவே தமிழும் பழமையான மொழி.
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று நேர்காணல் செய்துள்ளது. அப்போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த யோகி ஆதித்யாத்திடம் தமிழ்நாட்டில் நிலவும் இருமொழிக்கொள்கை விவகாரம் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு யோகி ஆதித்யநாத் கருத்து கூறுகையில், ஒரு நாடு என்பது மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்தக்கூடாது. காசி தமிழ் சங்கமத்தை வாரணாசியில் ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ் மொழி மீது மிகுந்த மரியாதையை ஒவ்வொரு இந்தியர்களும் வைத்துள்ளனர். சமஸ்கிருதத்தைப் போலவே தமிழும் பழமையான மொழி. ஓட்டுக்காக தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்து நாட்டை பிளவுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
தமிழகத்தில் ஓட்டுக்காக மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். வாக்கு வங்கி அபாயத்தில் இருப்பதை உணரும் போது மொழியை வைத்து அரசியல்.
மொழி மற்றும் பிராந்தியங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது என்று கூறினார்.