புதுச்சேரி

பொங்கல் பண்டிகை கொண்டாட புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை

Published On 2025-01-11 11:10 IST   |   Update On 2025-01-11 12:10:00 IST
  • ஜன.17-ந்தேதி தமிழகத்தை போல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
  • தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது.

புதுச்சேரி:

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது.

அடுத்த 15, 18 மற்றும் 19-ந்தேதிகள் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது. எனவே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில்,

அதற்கு இடைப்பட்ட நாளான ஜன.17-ந்தேதி தமிழகத்தை போல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதையடுத்து வருகிற 17-ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை சார்பு செயலர் ஷிரன் பிறப்பித்துள்ளார்.

இதேபோல், வருகிற 16-ந் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்காமல், வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்த்து ஏற்கனவே அரசாணை பிறப்பித்து இருந்தது. அதை மாற்றி தற்போது 16-ந் தேதியும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

இந்த விடுமுறை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில், பிப். 1-ந் தேதி மற்றும் 8 ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்.

இதன் மூலம் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது

Tags:    

Similar News