புதுச்சேரி

பொங்கல் தொகுப்புக்கு பதில் ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Published On 2025-01-03 14:39 GMT   |   Update On 2025-01-03 14:39 GMT
  • தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.
  • புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத.

இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News