புதுச்சேரி

சட்டசபையில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்- தலைமை செயலாளர் உத்தரவு

Published On 2025-03-06 10:19 IST   |   Update On 2025-03-06 10:19:00 IST
  • பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.
  • 12-ந்தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. 12-ந்தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

சட்டசபை நிகழ்வு குறித்து தலைமை செயலாளர் சரத் சவுகான் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி சட்ட சபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்பான பட்டியல் சட்டசபை செயலகத்தால் பின்னர் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் சபைக்கு வந்து விவாதங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். விவாதங்கள் நடக்கும்போது துறை செயலாளர்கள், சிறப்பு செயலாளர்கள் சபை வளாகத்தில் இருந்து அமைச்சர்களுக்கு தேவையான கூடுதல் விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

எழுத்து கேள்விகளுக்கான பதில்கள், கேள்விகள் சபையில் 48 மணிநேரத்துக்கு முன்பாகவே சட்ட சபை செயலகத்துக்கு வழங்க வேண்டும். துணை கேள்விகளுக்கும் பின்னணி தகவல்களை சேகரித்து பதில்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சட்டசபை செயலகத்துக்கு பதில்களை வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை செயலாளர், அமைச்சரின் ஒப்புதலை பெறவேண்டும்.

நாள்தோறும் நடைபெறும் முக்கியமான நிகழ்வு 2 குறிப்புகளை தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். சட்டசபைக்கு வரும் போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News