புதுச்சேரி

புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2025-03-02 11:42 IST   |   Update On 2025-03-02 11:42:00 IST
  • ஜூலை மாதம் இறுதி வாரத்தில் 12-வது உலக தமிழ் மாநாடு நடத்த முடிவு.
  • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

புதுச்சேரி:

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

அதனையொட்டி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் 12-வது உலக தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான இந்தியாவின் கிளை நிர்வாகிகள் புதுச்சேரி சட்ட சபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவர்னரின் செயலாளர் மணிகண்டன், கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புதுச்சேரியில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News