புதுச்சேரி

புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் நேபாள நாட்டுக்கு சுற்றுலா பயணம்

Published On 2025-03-01 11:30 IST   |   Update On 2025-03-01 11:30:00 IST
  • விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.
  • 5-ந் தேதி பசுபதி நாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6-ந் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர்.

புதுச்சேரி:

நேபாள அரசு அங்குள்ள சட்டசபையைக்காண புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்தது.

நேபாள அரசின் அழைப்பின் பேரில் புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் ஒரு வார கால சுற்றுலா பயணமாக நேபாளம் செல்கின்றனர். இதன்படி எம்.எல்.ஏ.க்கள் இன்று (சனிக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கு தங்குகின்றனர்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.

3-ந் தேதி காலை விமானம் மூலம் போகரா செல்லும் எம்.எல்.ஏ.க்கள், அங்கு சட்டசபையை பார்வையிடுகின்றனர். அதன்பிறகு அங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர்.

4-ந் தேதி போகராவில் இருந்து காத்மாண்டு திரும்புகின்றனர். மாலையில் பதான்தர்பார், சுயம்புநாதர் கோவிலை பார்வையிடுகின்றனர்.

5-ந் தேதி பசுபதி நாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6-ந் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர்.

7-ந் தேதி காத்மாண்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்புகின்றனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் நேபாளம் செல்வார்கள் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News