செய்திகள்

உலக துப்பாக்கி சுடுதல்: கலப்பு இரட்டையர் பிரிவில் ஹீனா சித்து - ஜித்து ராய் ஜோடி தங்கம்

Published On 2017-10-24 08:33 GMT   |   Update On 2017-10-24 08:33 GMT
டெல்லியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது.
சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட் பெடரேசன் சார்பில் டெல்லியில் உள்ள டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கி ரேஞ்சர்ஸில் இன்று உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது.

இதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் அணிகள் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஹீனா சித்து - ஜித்து ராய் ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்தியாவுடன் மேலும் நான்கு நாடுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.



இறுதிப் போட்டியில் ஹீனா சித்து - ஜித்து ராய் ஜோடியுடன் மேலும் நான்கு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய ஜோடி 483.4 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றது. பிரான்ஸ் அணி 481.1 புள்ளிகளுடன் வெள்ளியும், சீனா அணி 418.2 புள்ளிகளுடன் வெண்கல பதக்கமும் வென்றது.

Similar News