செய்திகள்

உலக ரேபிட் செஸ் பட்டம் வென்ற ஆனந்துக்கு பாராட்டு விழா: சென்னையில் நடந்தது

Published On 2018-01-06 04:22 GMT   |   Update On 2018-01-06 04:22 GMT
அகில இந்திய செஸ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில், சமீபத்தில் உலக ரேபிட் செஸ் பட்டம் வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
சென்னை:

அகில இந்திய செஸ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில், சமீபத்தில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பாராட்டு விழா சென்னையில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் ஆனந்துக்கு அகில இந்திய செஸ் சங்க செயலாளர் பாரத்சிங் சவுகான், முன்னாள் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் செயலாளர் மனுவேல் ஆரோன், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினார்கள். அத்துடன் அவருக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

விழாவில் ஆனந்தின் மனைவி அருணா, சர்வதேச செஸ் சம்மேளன துணைத்தலைவர் டி.வி.சுந்தர், அகில இந்திய செஸ் சங்க தலைவர் வெங்கட்ராமராஜா, தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, அமைப்பு குழு சேர்மன் முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவுக்கு வந்த ஆனந்துக்கு கல்லூரி மாணவிகள் அனைவரும் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Similar News