கிரிக்கெட் (Cricket)
null

பிரிஸ்பேன் டெஸ்டில் மழை குறுக்கீடு: மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்காத ஆட்டம்

Published On 2024-12-14 02:38 GMT   |   Update On 2024-12-14 04:06 GMT
  • இந்திய அணியில் ஜடேஜா, ஆகாஷ் தீப் சேர்ப்பு.
  • ஆகாஷ் தீப் பந்தை சிறப்பான வகையில் ஸ்விங் செய்தார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆடுகளத்தில் புற்கள் இருந்ததாலும், மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததாலும் பந்து வீச்சை தேர்வு செய்ததாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் கவாஜா மற்றும் மெக்ஸ்வீட்னி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். 5.3 ஓவர்கள் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.

சிறிது நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முகமது சிராஜ் 3 ஓவர்கள் வீசிய நிலையில் நிறுத்தப்பட்டார். அதன்பின் ஆகாஷ் தீப் அழைக்கப்பட்டார். இவர் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்து அசத்தினார். என்றாலும் விக்கெட் எடுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியா 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீட்னி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News