3-வது ஐசிசி தொடர்.. இது புதுசா இருக்கே.. ஆப்கன் அணியின் ஆலோசகராக யூனிஸ்கான் நியமனம்
- ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ஆப்கன் அணியின் ஆலோசகராக இருந்தார்.
- டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் ஆலோசகராக இருந்தார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஜனவரி 12-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. அணியில் மாற்றம் செய்ய பிப்ரவரி 13-ந்தேதி வரை ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு ஐசிசி தொடருக்கும் ஒவ்வொரு புதிய ஆலோசகரை நியமிக்கிறது. அந்த வகையில் இந்த முறை யூனிஸ் கானை நியமித்துள்ளது.
இதற்கு முன்பு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவும், அமெரிக்கா, மே.இ.தீவுகளில் நடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிராவோவும் ஆப்கனின் ஆலோசகர்களாக செயல்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் அணி, ஐசிசி தொடர் நடக்கும் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சிறந்தவர்களை தங்களது கிரிக்கெட் அணியின் ஆலோசகாராக நியமிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.