கிரிக்கெட் (Cricket)

SA20 லீக்கில் இந்திய வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதிக்கும்: டி வில்லியர்ஸ் நம்பிக்கை

Published On 2025-01-07 21:01 IST   |   Update On 2025-01-07 21:01:00 IST
  • இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டுமே இளம் வீரர்களை அடிப்படையாக கொண்ட லீக்கின் மதிப்பை உயர்த்தும்.
  • தினேஷ் கார்த்திக் இந்த வருடம் விளையாட வருவது அற்புதமானது. இந்த தொடருக்கு சிறப்பானது.

இந்தியாவில் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ், பாகிஸ்தானில் பி.எஸ்.எல். நடைபெறுவது போன்று தென்ஆப்பிரிக்காவில் SA20 லீக் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதிக்கும் என டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டி வில்லியர்ஸ் கூறுகையில் "இந்திய வீரர்கள் SA20 லீக்கில் விளையாட எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என நம்புகிறேன். இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டுமே இளம் வீரர்களை அடிப்படையாக கொண்ட லீக்கின் மதிப்பை உயர்த்தும்.

தற்போது தினேஷ் கார்த்தில் மட்டும் இடம் பிடித்துள்ளார். ஆனால் இவர் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். மேலும் அதிகமான இந்திய வீரர்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

தினேஷ் கார்த்திக் இந்த வருடம் விளையாட வருவது சிறப்பானது. இந்த தொடருக்கு சிறப்பானது. தற்போது பீக் பார்மில் இருக்கும் வீரர்கள் வந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.

பும்ரா, ரஷிப் பண்ட், விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களை தேர்வு செய்வேன்.

சூர்யகுமார் யாதவ் இங்கே விளையாடினால் கற்பனை செய்து பாருங்கள். அமேசிங்காக இருக்கும். பழைய வீரர்களை எடுத்துக் கொண்டால் உத்தப்பா, இர்பான் பதான் போன்றோர் என் நினைவில் உள்ளனர்" என்றார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிநாடுகளில் நடைபெறும் எந்தவொரு லீக்கிலும் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை. SA20 லீக் அணிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அணி உரிமையாளர்கள்தான் உரிமையாளர்களாக உள்ளனர்.

Tags:    

Similar News