தென் ஆப்பிரிக்காவில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்: ஷான் மசூத் சாதனை
- பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 478 ரன்கள் எடுத்தது.
- கேப்டன் ஷான் மசூத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 615 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் பொறுப்புடன் ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் ஷான் மசூத், பாபர் அசாம் ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 81 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஷான் மசூத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 251 பந்துகளை சந்தித்து 145 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 478 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 58 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதில் அசார் மஹ்மூத் 136 ரன்னும், தவுபீக் உமர் 135 ரன்னும் எடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய கேப்டன்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 169 ரன்னுடனும், விராட் கோலி 153 ரன்னுடனும் முதல் இரு இடங்களில் நீடிக்கின்றனர்.