கிரிக்கெட் (Cricket)

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை: சூப்பர் 6 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

Published On 2025-01-26 22:30 IST   |   Update On 2025-01-26 22:30:00 IST
  • முதலில் ஆடிய வங்கதேசம் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.
  • அடுத்து ஆடிய இந்தியா 7.1 ஓவரில் 66 ரன்கள் எடுத்து வென்றது.

கோலாலம்பூர்:

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்னும், ஜன்னத்துல் மவுமா 14 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து ஆடிய இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிஷா 31 பந்தில் 40 ரன் விளாசினார்.

இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருதை வைஷ்ணவி வென்றார்.

Tags:    

Similar News