கிரிக்கெட் (Cricket)

நீண்ட இடைவெளிக்கு பின் ரஞ்சி போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மா

Published On 2025-01-20 17:13 IST   |   Update On 2025-01-20 17:13:00 IST
  • மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
  • மும்பை அணியை அனுபவம் மிக்க அஜிங்க்யா ரகானே வழிநடத்துகிறார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாடுகிறார். ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டி வருகிற ஜனவரி 23-ம் தேதி மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் மும்பை அணியை அனுபவம் மிக்க அஜிங்க்யா ரகானே வழிநடத்துகிறார். ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவது பற்றிய முடிவை ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.

எட்டு போட்டிகளிலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை பி.சி.சி.ஐ. கடந்த வாரம் தான் கட்டாயமாக்கியது. 

Tags:    

Similar News