கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் கோப்பை.. UAE-இல் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்

Published On 2024-12-23 02:31 GMT   |   Update On 2024-12-23 02:31 GMT
  • இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள முடியாது என கூறியது.
  • போட்டிகள் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இதனால் இந்த தொடரின் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள முடியாது என கூறியது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இடையே கடும் இழுபறி சூழல் நிலவி வந்தது. பிறகு, இந்திய அணி விளையாடும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளன. இரு அணிகள் இடையிலான பொதுவான இடமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்துள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் ஆமிர் மிர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஐக்கிய அரபு அமரீகத்தின் கிரிக்கெட் வாரிய தலைவர், "பொதுவான களம் குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.-யிடம் அறிவித்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்."

"சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பொதுவான இடம் பற்றிய முடிவை, இந்தத் தொடரை நடத்தும் பாகிஸ்தான் தான் எடுக்க வேண்டும். இதுப்பற்றிய இறுதி முடிவு மொசின் நக்வி மற்றும் ஷேக் அல் நயன் இடையிலான ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்டது," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News