அஸ்வினுக்கு பிரியா விடை கொடுத்த இந்திய வீரர்கள்- வைரல் வீடியோ
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
- அவருக்கு சக வீரர்கள் பிரியா விடை கொடுத்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 3 டெஸ்ட் போடிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி டிரா என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓய்வு அறிவித்த அஸ்வினுக்கு இந்திய வீரர்கள் மரியாதை செலுத்தினர். 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடாவில்லை. இருந்தாலும் அவரை மைதானத்துக்கு வரவழைத்து சக வீரர்களுக்கு மத்தியில் அவர் நடந்து சென்றார். பின்னர் இதனை ஏற்பாடு செய்த கேப்டன் ரோகித் சர்மாவை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.