ஐ.பி.எல்.
காயம் காரணமாக ஆப்கான் வீரர் அல்லா கசன்ஃபர் விலகல்.. மாற்று வீரரை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்
- மும்பை இந்தியன்ஸ் அணியால் ஆப்கான் வீரர் அல்லா கசன்ஃபர் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
- இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இறுதி போட்டிக்கு வந்த 5 முறை கோப்பையை கைப்பற்றிய ஒரே அணியாக மும்பை உள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் அல்லா கசன்ஃபருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.
முஜீப் உர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.