ஐ.பி.எல்.(IPL)
ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஜோப்ரா ஆர்ச்சர்

ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஜோப்ரா ஆர்ச்சர்

Published On 2025-03-23 20:52 IST   |   Update On 2025-03-23 20:52:00 IST
  • ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார்.
  • தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஐதராபாத்:

18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்து அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார். டிராவிஸ் ஹெட் 67 ரன்னில் அவுட் ஆனார். இஷான் கிஷன் 106 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 76 ரன்கள் கொடுத்தார்.

இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஜோப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார்.

ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள்:

ஜோப்ரா ஆர்ச்சர்: 4-0-76-0

மொஹித் சர்மா: 4-073-0

பாசில் தம்பி: 4-0-70-0

Tags:    

Similar News