
null
ஐ.பி.எல் 2025: சிஎஸ்கே அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்
- 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
- போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்தது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதின. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இதைதொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு 11-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் மோதியுள்ளன.
இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலாவதாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. சிஎஸ்கே பந்து வீச்சில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா-81, ரியான் பரக்-37, சஞ்சு சாம்சன்-20 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.