கிரிக்கெட் (Cricket)
ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை: இந்திய கேப்டன் ரோகித் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
- விராட் கோலி 1 இடம் பின்தங்கி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
- முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.
ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையை இன்று ஐசிசி-யை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10- இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அதன்படி 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 1 இடம் பின் தங்கி 5-வது இடத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற நியூசிலாந்து வீரர் 14 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.