ரிஷப் பண்ட் தங்கை திருமணம்- குத்தாட்டம் போட்ட தோனி, ரெய்னா.. வைரல் வீடியோ
- ரிஷப்பண்டின் தங்கை சாக்ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார்.
- திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார்.
டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்டின் தங்கை சாக்ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார். இவர்களது திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.
இதையொட்டி திருமண சடங்குகள் நேற்று தொடங்கியது. திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார். இதே போல் சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தோனி, சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் குத்தாட்டம் போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ரிஷப் பண்டின் தங்கை திருமணத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.