ஐ.பி.எல்.

பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர்: சஞ்சு சாம்சன்

Published On 2025-03-12 19:03 IST   |   Update On 2025-03-12 19:03:00 IST
  • நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம்.
  • எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த ஏழு வருடமாக விளையாடியவர் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன ஜாஸ் பட்லர். இவரை மெகா ஏலத்தில் குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனான சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்டர் தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அணியின் ஒரு வீரராக இல்லை என்ற நிலைக்கு நான் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

ஐபிஎல் அணியை வழி நடத்தும் வாய்ப்பை கொடுக்கிறது. விளையாட்டில் உயர்தரத்தை வழங்குகிறது. நெருங்கி நட்பை உருவாக்க அனுமதிக்கிறது.

ஜாஸ் பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம். இந்தக் காலகட்டத்தில், எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால், நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.

எனக்கு பட்லர் மூத்த சகோதரர் மாதிரி. எனக்கு சந்தேகம் வரும்போதெல்லம், அவரிடம் பேசுவேன். நான் 2021-ல் கேப்டனாகும்போது, அவர் என்னுடைய துணைக் கேப்டன். நான் சிறந்த கேப்டனாக உதவி செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர் மற்றும் என்னுடன் ஆறு பேரை தக்கவைத்தது. இதனால் அவர் அணியில் இருந்து வெளியிடுவது கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து தொடரின்போது அவருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பட்லரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு வீரராாக இல்லை என்று முடிவுக்கு இன்னும் நான் வரவில்லை எனத் தெரிவித்தேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு விசயத்தை என்னால் மாற்ற முடியும் என்றால், ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் வீரர்களை வெளியிட வேண்டும் என்ற விதியை மாற்றுவேன்.

ஐபிஎல் விதிக்கு சில நேர்மறையான அம்சங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக உருவாக்கிய அந்த இணைப்பை, உறவை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார். நான் வேறு என்ன சொல்ல முடியும்?.

இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News