கிரிக்கெட் (Cricket)
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- ஜிம்பாப்வே அணி 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது
ஹராரே:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி 28 ஓவராகக் குறைக்கப்பட்டது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. 9.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜிம்பாப்வே அணி 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.