நியூசிலாந்து அணியின் கேப்டன் ஆனார் மிட்செல் சான்ட்னெர்
- இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் நியூசிலாந்து நாட்டிலேயே நடைபெறுகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு மிட்செல் சாண்ட்னெர்-ஐ நியமித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மிட்செல் சான்ட்னெர் நியூசலாந்து அணிக்காக 30 டெஸ்ட், 107 ஒருநாள் மற்றும் 106 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.