கிரிக்கெட் (Cricket)
null

செய்தியாளரிடம் கூகுள் பண்ணச் சொன்ன பும்ரா- பதில் அளித்த சுந்தர் பிச்சை

Published On 2024-12-18 06:09 GMT   |   Update On 2024-12-18 06:48 GMT
  • மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.
  • செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்படி இந்திய அணி பேட்டிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்பிரித் பும்ரா, "நீங்கள் என் பேட்டிங் திறமை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் நான் தான். இதுபற்றி அறிந்து கொள்ள நீங்கள் கூகுளை பயன்படுத்தலாம். நகைச்சுவையை விட்டு விடுங்கள்," என்று பதில் அளித்தார்.

 


கூகுள் தேடல் குறித்த பும்ராவின் கருத்துக்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நான் கூகுள் செய்தேன். கம்மின்ஸ் பந்தில் சிக்சர் விளாசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு நிச்சயம் பேட்டிங் தெரியும். ஆகாஷ் தீப் உடன் இணைந்து ஃபாலோ ஆன்-ஐ தடுத்த விதம் நன்றாக இருந்தது ஜஸ்பிரித் பும்ரா," என்று குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சையின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க், "அருமை" என்று பதில் அளித்து இருந்தார். இந்திய வீரர் பும்ராவின் கருத்துக்கு சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதில் அளித்தது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

Tags:    

Similar News