கிரிக்கெட் (Cricket)
2-வது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி- தொடரை கைப்பற்றியது வங்கதேசம்
- முதல் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 7 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.
- இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.
கிங்ஸ்டன்:
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் தோற்று தொடரை இழந்தது.
கிங்ஸ்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மோட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 102 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 32, அகேல் ஹொசின் 31 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்திலும் அந்த அணி 7 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி 20-ந்தேதி நடக்கிறது.