கால்பந்து

இங்கிலீஷ் பிரீமியர் லீக்: இன்றிரவு ஆர்சனல்- பிரென்ட்போர்டு மோதல்

Published On 2025-01-01 20:06 IST   |   Update On 2025-01-01 20:06:00 IST
  • புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன.
  • ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் முக்கிய கால்பந்து தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக். இந்த லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சனல்- பிரெனட்போர்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன. ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளை டிரா செய்துள்ளது. 2 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 36 புள்ளிகள் பெற்றுள்ளது.

லிவர்பூல் 18 போட்டிகளில் 14 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி மூலம் 45 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. பிரான்ட்போர்டு 18 போட்டிகளில் 7-ல் வெற்றி, 3-ல் டிரா, 8-ல் தோல்வி மூலம் 24 புள்ளிகள் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஆஸ்திரேலியன் ஏ லீக் போட்டியில் மெக்ஆர்தர் எஃப்சி 3-2 என வெஸ்டர்ன் சிட்னி வாண்டரர்ஸ் அணியை வீழ்த்தியது.

இங்கிலீஷ் லீன் ஒன் தொடரில் இன்று 11 போட்டிகளில் நடைபெற இருக்கிறது. இஸ்ரே் பிரீமியர் லீக்கில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

வேல்ஷ் பிரீமியர் லீக்கில் இரணடு போட்டிகள் நடைபெறுகின்றன. 

Tags:    

Similar News