யுவான்டஸ் ஸ்ட்ரைக்கரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டும் ஆர்சனல்
- யுவென்டஸ் ஸ்ட்ரைக்கர் டுசன் விளாகோவிச்சை ஒப்பந்தம் செய்ய ஆர்சனல் ஆர்வம்.
- ஸ்போர்ட்டிங் சி.பி. ஸ்ட்ரைக்கர் விக்டர் கியோகெர்ஸை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெ் விருப்பம்.
கால்பந்து போட்டியை பொறுத்த வரையில் ஒரு சீசன் முடிவடைந்த பின்னர் மே அல்லது ஜூன் மாதத்தில் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். அதன்பின் ஜனவரி மாதமும் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். இந்த இரண்டு காலக்கட்டத்தில் வீரர்கள் கிளப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
அந்த வகையில் தற்போது வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெற வாய்ப்புள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் இத்தாலி கிளப்பான யுவென்டஸில் விளையாடும் டுசன் விளாகோவிச்சை ஒப்பந்தம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
24 வயதான டுசன் விளாகோவிச் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். யுவென்டஸ் அணியின் ஸ்ட்ரைக்கராக உள்ளார். புகாயோ சகாவிற்குப் பதிலாக இவரை அணியில் இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவருக்கு ஆர்சனல் மானேஜர் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொருசியா டார்ட்மண்ட் அணியின் ஜேமி கிட்டன்ஸ் அல்லது பேயர்ன் முனிச் அணியின் லெரோய் சானோ ஆகியோரில் ஒருவர் மீதும் பார்வை வைத்துள்ளது. விளாகோவிச் இந்த சீசனில் 22 போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெ் மானேஜர் ரூபன் அமோரிம், ஸ்போர்ட்டிங் சி.பி. ஸ்ட்ரைக்கர் விக்டர் கியோகெர்ஸை ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஸ்டிக்கர் விக்டர் கியோகெர்ஸை 80 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.ஜி. ஸ்ட்ரைக்கர் ரண்டல் கோலோ முயானியை, அவருடைய வருட சம்பளம் 8 மில்லியன் யூரோ முழுமையாக ஈடுகட்டப்பட்டால் லோனில் விடுவிக்க தயாராக இருக்கிறது. 26 வயதான முயானியை ஒப்பந்தம் செய்ய பேயர்ன் முனிச், செல்சி, யுவென்டஸ், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் போன்ற அணிகள் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்கள வீரர் மார்கஸ் ரஷ்போர்டு, மான்செஸ்டர் யுனைடெ் அணியில் இருந்து வெளியேறி புதிய சவாலுக்கு தயார் எனத் தெரிவித்திருந்தார். இதனால் ஜனவரி டிரான்ஸ்பரில் இவரைது பெயரும் அடிபட்டுள்ளது.