கால்பந்து

இந்தியாவை வீழ்த்தி இன்டர்காண்டினென்டல் கோப்பையை முதல் முறையாக வென்றது சிரியா

Published On 2024-09-10 08:05 GMT   |   Update On 2024-09-10 08:05 GMT
  • ஏழாவது நிமிடத்தில் சிரியா முதல் கோலை பதிவு செய்தது.
  • கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது.

ஐதராபாத்தில் நடந்த 2024 இன்டர்காண்டினென்டல் கோப்பையின் இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் சிரியாவிடம் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், கோல் வித்தியாசத்தில் மொரீஷியஸை பின்னுக்குத் தள்ளி, போட்டியில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தது.

ஏழாவது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலை விட்டுக் கொடுத்தது. இரண்டாவது பாதியில் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஆட்டத்திற்கு எதிராக இரண்டாவது கோல் அடித்தது சிரியா. 96-வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடிக்கப்பட்டது.

கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இன்டர்காண்டினென்டல் கோப்பையை சிரியா முதல் முறையாக வென்றுள்ளது.

Tags:    

Similar News