விளையாட்டு

இந்திய அணி 2025-ம் ஆண்டில் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள்

Published On 2025-01-01 05:24 GMT   |   Update On 2025-01-01 05:24 GMT
  • பிப்ரவரி-மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கிறது.
  • வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

2024-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் தோற்றது. மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் 184 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

2025-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி விவரங்கள் முழுவதும் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 3-ந்தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியோடு இந்த ஆண்டு இந்தியாவில் போட்டி தொடங்குகிறது.

இதையடுத்து ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்ததாக பிப்ரவரி-மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கிறது.

அதன்பிறகு இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அக்டோபரில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணி அதன்பின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 வடிவிலான தொடரிலும் விளையாடவுள்ளது. இந்திய அணி இந்த ஆண்டில் 18 இருபது ஓவர் போட்டிகளிலும், 10 டெஸ்டிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் ஆடுகிறது.

Tags:    

Similar News