விளையாட்டு
null

சர்வதேச பேட்மிண்டன்: தமிழக வீரர் ரித்விக் சஞ்சீவி சாம்பியன்

Published On 2024-11-11 05:24 GMT   |   Update On 2024-11-11 05:32 GMT
  • ஹட்சன் பேட்மிண்டன் மையத்தில் ரித்விக் சஞ்சீவி பயிற்சி பெற்று வருகிறார்.
  • தலைமை பயிற்சியாளர் ரஜினிகாந்த், ஹட்சன் நிறுவன தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் ஆகியோர் அவரை பாராட்டியுள்ளனர்.

தெலுங்கானாவில் நடந்த என்.எம்.டி.சி. சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் தமிழகத்தின் இளம் நட்சத்திரமான ரித்விக் சஞ்சீவி சாம்பியன் பட்டம் பெற்றார்.

எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக மாணவரான அவர் ஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 21-11, 21-14 என்ற கணக்கில் தருண் ரெட்டி கதத்தை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஹட்சன் பேட்மிண்டன் மையத்தில் ரித்விக் சஞ்சீவி பயிற்சி பெற்று வருகிறார். தலைமை பயிற்சியாளர் ரஜினிகாந்த், ஹட்சன் நிறுவன தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் ஆகியோர் அவரை பாராட்டியுள்ளனர்.

Tags:    

Similar News