ஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் சின்னர்- ஷெல்டன், ஜோகோவிச்- ஸ்வெரேவ் பலப்பரீட்சை
- காலிறுதியில் சின்னர் 6-3, 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் மினாரை எளிதாக தோற்கடித்தார்.
- அமெிரிக்க வீரர் ஷெல்டன் இத்தாலி வீரரை 6-4, 7-58, 4-6, 7(7)-6(4) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையருக்கான இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவிவன் ஷெல்டன், இத்தாலியின் லோரென்சோ சோனேகோவை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை ஷெல்டன் 6-4 எனவும், 2-வது செட்டை 7-5 எனவும் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 4-6 என இழந்தார். 4-வது செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 4-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7(7)- 6(4) என ஷெல்டன் கைப்பற்றினார். இதனால் 6-4, 7-58, 4-6, 7(7)-6(4) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீரரான இத்தாலியின் சின்னர் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார். மினார் சொந்த மண்ணில் விளையாடினாலும் முதல் நிலை வீரரான சின்னரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் சின்னர் 6-3, 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளைதமறுதினம் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் சின்னர்- ஷெல்டர், ஜோகோவிச்- ஸ்வெரேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
ஷெல்டனை எளிதாக வீழ்த்தி சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் ஜோகோவிச்- ஸ்வெரேவ் இடையிலான ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.