டென்னிஸ்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: டிமித்ரோவ் காயத்தால் வெளியேற்றம்- இறுதிப் போட்டியில் ஜிரி லெகேக்கா

Published On 2025-01-04 09:07 GMT   |   Update On 2025-01-04 09:07 GMT
  • முதல் செட்டை டிமித்ரோவ் 4-6 என இழந்தார்.
  • 2-வது செட்டில் 4-4 என சமநிலை பெற்றபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான டிமித்ரோவ், செக்குடியரசின் தரநிலை பெறாத ஜிரி லெகேக்காவை எதிர்கொண்டார்.

நடப்பு சாம்பியனுக்கு எதிராக லெகாக்கா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிமிட்ரோவால் லெகாக்கா ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 4-6 என அதிர்ச்சிகரமாக இழந்தார்.

2-வது செட்டில் நம்பிக்கையுடன் விளையாடினார். 2-வது செட்டில் 4-4 என சமநிலையில் இருக்கும்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செக்குடியரசு வீரர் ஜிரி லெகேக்கா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

மற்றொரு அரையிறுதி இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா- பிரான்ஸின் பெரிகார்ட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் வீரருடன் ஜிரி லெகேக்கா சாம்பியன் பட்டத்திற்காக மோதுவார்.

முதல்நிலை வீரரான ஜோகோவிச் நேற்று நடைபெற்ற காலிறுதியில் அமெரிக்காவின் ஓபெல்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் குடெர்மெட்டோவா கலினினாவை 6-4, 6-3 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் முதல்நிலை வீராங்கனையாக சபலென்கா 8-ம் நிலை வீராங்கனையான அனட்ரீவாவுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறார்.

Similar News