டென்னிஸ்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

Published On 2025-01-05 22:00 IST   |   Update On 2025-01-05 22:00:00 IST
  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
  • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

சிட்னி:

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெட்ரோவா உடன் மோதினார்.

இதில் சபலென்கா முதல் செட்டை 4-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் பெறுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News