பிரிஸ்பேன் டென்னிஸ்: அரையிறுதியில் ஆண்ட்ரீவாவுடன் மோதும் சபலென்கா
- முதல் அரையிறுதி போட்டியில் அன்ஹெலினா கலினினாவும் போலினா குடெர்மெடோவாவும் மோத உள்ளனர்.
- 2-வது அரையிறுதியில் சபலென்கா, ஆண்ட்ரீவாவுடன் மோதுகிறார்.
பிரிஸ்பேன்:
முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பெண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இதில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரேனிய வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் ஆஸ்திரேலிய வீராங்கனை கிம்பர்லி பிர்ரெல்லும் மோதின. இதில் அன்ஹெலினா கலினினா 4-6, 6-1, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஆஷ்லின் க்ரூகரும் ரஷ்ய வீராங்கனை போலினா குடெர்மெடோவாவும் மோதினர். இதில் போலினா குடெர்மெடோவா 7-5, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்ற இரண்டு ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-4 என்ற கணக்கில் எம். பௌஸ்கோவாவை வீழ்த்தினார். எம். ஆண்ட்ரீவா 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் முதல் அரையிறுதி போட்டியில் அன்ஹெலினா கலினினாவும் போலினா குடெர்மெடோவாவும் மோத உள்ளனர். 2-வது அரையிறுதியில் சபலென்கா, ஆண்ட்ரீவாவுடன் மோதுகிறார்.